Thursday, July 02, 2009

வலைப்பதிவு கரையோரம் -நானும் பதிவர்தான்.. நானும் பதிவர்தான்.. நானும் பதிவர்தான்..


வலைப்பதிவு கரையோரம் அடிக்கடி காற்று வாங்கி காலாற நடை பயின்றுகொண்டிருந்தவன் கடந்த 2006 ம் ஆண்டு இந்த வலைப்பதிவை தொடங்கினேன்தொடங்கிய கையோடு இதை ஏறக்கட்டி விட்டு சென்று விட்டேன் அவ்வப்போது காற்று வாங்க வருவதோடு சரி பதிவலைகளில் கால் நனைப்பது (பின்னூட்டமிடுவது) கூட கிடையாது

எழுதுவதற்க்கு ஆசை உண்டு ஆனால் (ஆசை உண்டு தாசில் பண்ண அம்சம் உண்டு கழுதை மேய்க்க என்பது போல்) என்ன எழுதுவது என்று தெரியாது

பதிவராக வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

சரி எப்படியாவது ஓரு பிரபல வலைப்பதிவர் ஆகிவிடவேண்டும் என்று முடிவு செய்து அது குறித்து ஆறிவுரை பெற என் நண்பன் அதிரடி ஆலோசகர் அழகர்சாமியை பார்க்கலாம் என்று அவனுக்கு செல்பேசினேன்

மாலை ஒரு 7 மணிக்கு டாஸ்மாக் கடையருகில் உள்ள பாரில் சந்தித்தோம்

"அழகரு ஒன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்டா"

" என்னா ஏதாவது லவ் மேட்டரா?"

" மடையா, கல்யாணமானவன் கிட்ட கேக்குற கேள்வியா இது"

"அதில்லடா... நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன் தான்ற விதத்துல கேட்டேன்"

"இல்ல இல்ல ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் தான் நீ நிதானமா பேசுவ மொதல்ல சியர்ஸ்"

இரண்டு பெரிசுக்கு அப்புறம் நான் ப்ளாக் ஆரம்பித்தது பற்றியும், நீண்ட நாட்களாக அதில் எதுவும் எழுதாதது பற்றியும், இப்போது மீண்டும் பதிவுகள் எழுதி ஒரு பிரபல பதிவராகவேண்டும் என்ற துடிப்பும் வேகமும் ஏற்பட்டிருப்பது பற்றியும் எடுத்துரைத்தேன்.

"அழகரு, ஒன்ன விட்டா என்ன கரையேத்த ஆளே இல்ல நீதான் எப்படியாவது என்ன ஒரு பிரபல பதிவராக்கனும்" என்று விண்ணப்பித்தேன்

அழகர் என்னை வாத்ஸல்யத்துடன் பார்த்தான் பிறகு நேர்முக தேர்வு போல் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க ஆரம்பித்தான்

"விஷயத்துடன் பொருள் பொதிந்த பதிவுகள் வேண்டாம் மொக்கைப்பதிவுகளாவது எழுதத் தெரியுமா?"

" ம்ஹூம்..."

"கவுஜை, கட் & பேஸ்ட், காமெடி?"

" ம்ஹூம்..."

"அரசியல், ஆன்மீகம்?"

" ம்ஹூம்..."

"நாட்டு நடப்பு, நடவு வரப்பு?"

" ம்ஹூம்..."

"தொழில்நுட்பம், துறை சார்ந்த பதிவுகள்?"

" சுத்தம்..."

" பதிவர் வட்டம், சதுரம், முக்கோணம்?"

" ம்ஹூம்..."

" படம் காட்டவாவது, பாட்டுப்போடவாவது?"

" தெரியாது..."

" போடா கய்த நீயெல்லாம் இன்னாதுக்கு பதிவு ஆரம்பிச்ச நீயேல்லாம் இதுக்கு லாயக்கில்லை பேசாம போய் பொழப்ப பாருடா போ... போ... போடா..." னு கோபத்துடன் மப்பு இறங்கிப்போய் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போய்விட்டான்

ஆனாலும் மக்களே, சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் இதையே ஒரு பதிவாய் போட்டுவிட்டேன்

ஆகவே

நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்...

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...