Wednesday, July 25, 2018

தமிழ் - திராவிடம்

தமிழ்  - திராவிடம் 


தமிழும் திராவிடமும் ஒன்றா அல்லது வேறுவேறா?

தமிழ் இனத்திற்கு  ஒரு நீண்ட நெடிய வரலாறும் தொன்மையும் உள்ளது என்பது பல்வேறு தருணங்களில் ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்ட செய்தி.
ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. இன்னும் உயிர்ப்புடன் இருப்பதும் ப கோடி மக்களால் பேசப்படுவதும் செம்மொழியான தமிழ் மொழியே.


கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றுள் முத்திரை பாதித்தது தமிழ். ஆகச்சிறந்ததொரு நாகரீகத்தையும் பண்பாடடையும் வார்த்தெடுத்த இனம்  தமிழ் இனம்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் வியாபித்திருந்த தமிழ் இனம், ஆரிய வருகையால் தென் இந்தியாவிற்குள் குறுக்கப்பட்டது. இந்தியா துணை கண்டத்தின் பூர்வகுடியான இனம்தான் தமிழ் இனம். வட இந்தியாவில்  ஆரிய யூரேசியா மற்றும் மங்கோலிய இனங்களின் தாக்கத்தால் முற்றிலும் மாறுபட்ட ஆரிய ஆதிக்கமிகுந்த இனமாக வட இந்திய சமூகம் மாறியது.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல் இல்லை. திராவிடம் என்பது தமிழ் சொல் இல்லை. அது ஆரியர்களால் அளிக்கப்பட்ட சொல். இந்தியா கண்டத்தின் , பாரத கண்டத்தின் பூர்வ குடிகளை குறிக்க ஆரியர் பயன்படுத்திய வார்த்தை. எனவே அவர்களது வருகைக்கு முன் அந்த சொல்லில்லை. இந்தியா என்ற சொல்லோ,இந்து என்ற சொல்லோ, பாரதம் என்ற சொல்லோ இல்லை.

ஆரியர் தாக்கமில்லாத தமிழ் வழங்கியும் புழங்கியும் வந்த மொத்த நிலப்பகுதியும் தமிழகம்தான். அதன் மக்களாகிய தமிழர்களை திராவிடர் என்று அழைத்தனர்.

திராவிடரின்  ஆதி மொழி தமிழ்.
எனவே திராவிடர் தமிழரே  தமிழர் திராவிடரே.

அப்போது திராவிட இனம்  என்பதும் தமிழ் இனமே.

தமிழில் இருந்து உருவான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற ஏனைய மொழிகள் திராவிட மொழி குடும்பமாக பார்க்கப்படுகிறது.
எல்லோருக்கும் தமிழ்த்தான் வேர். தமிழ் இனம் தான் முதன்மையான இனம்.
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழ் இனத்தின் கிளைகள்தான்.

இதை மறைத்து திராவிடத்தை இகழ்ந்து தமிழ் தேசியம் பேசும் இன  வெறியர்கள் ஆபத்தானவர்கள். குறுக்கியமானப்பன்மை கொண்ட சந்தர்ப்பவாதிகள். சுயநலமிகள். அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.




மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...