மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்
மும்மொழி திட்டம் என்றால் என்ன?
பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும்.
அவை ஆங்கிலம், தாய்மொழி மற்றும் ஒரு மூன்றாவது மொழி.
இங்கே ஹிந்தி பேசும் மாநிலங்களில் தாய்மொழி என்பது ஹிந்தி, ஹிந்திபேசாத மாநிலங்களில் தாய்மொழி என்பது அவரவர் தாய்மொழி.
மூன்றாவது மொழி என்பது இந்தியா வில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியாகவும் இருக்கும்.
சரி
எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது.
நியாயமாகத்தானே இருக்கிறது.
மூன்றாவது மொழி ஹிந்திதான் என்று இல்லையே. அது மலையாளம், தெலுங்கு , கன்னடம், வங்காளம் என எதுவாகவேண்டுமென்றாலும் இருக்கலாம்.
சிறப்பு. மிக சிறப்பு.
இப்போதும் சில மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளது. அங்கு என்ன மொழி கற்று கொடுக்கப்படுகிறது. யதார்த்தத்தில் எந்த மூன்றாவது மொழியும்கற்று கொடுக்கப்படுவதில்லை. அதற்குக்காரணம் அம்மொழிகளை கற்றுக்கொடுக்கத் தேவையான ஆசிரியர்கள் இல்லை என சொல்லப்படுகிறது.
ஆசிரியர்களை பணியமர்த்த என்னவிதமான முயற்சி எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இந்த பதில் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதே போல் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால்
மூன்றாவது மொழியாக ஹிந்தி மட்டுமே கற்றுக்கொடுக்கப்படும். வேறு மொழிகள் கற்று கொடுக்க ஆசிரியர் இல்லை என்பார்கள். வேறு மொழி கற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொண்டால் அது மத்திய அரசால் தடுக்கப்படும்.
இது சட்டப்படி திணிப்புஇல்லை ஆனால் திணிக்கப்படும்.
நமது மோடி பக்தர்கள் சட்டப்படி தானே ஹிந்தி கற்று கொடுக்கப்படுகிறது என்று சொல்வார்கள்.
இதைத்தானே இரண்டாயிரம் வருடமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மும்மொழி கொள்கை ஹிந்தித்திணிப்பா இல்லையா.
பஞ்சதந்திரம் அர்த்தசாஸ்திரம் எல்லாம் கரைத்துக்குடித்தவர்கள் ஆயிற்றே.
No comments:
Post a Comment