Skip to main content

Posts

பினாமி ஆட்சி இல்லை. நேரடி ஆட்சிதான்

பினாமி ஆட்சி இல்லை. நேரடி ஆட்சிதான் முதல்வர் ஆட்சி நடக்கிறதா? ஆளுநர் ஆட்சி நடக்கிறதா? எடப்பாடியின்  கூற்றுபடி ஆட்டமுடியாத அசைக்கமுடியாத அரசை ஆட்டிப்படைக்கிறதா மத்திய அரசு.  காங்கிரெஸ்ஸை குறை சொன்ன பி ஜே பி, அதை விட மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்துவது ஒரு முன்னோட்டமே. கூடிய சீக்கிரம் எல்லைகள் விரிவடையும். வெட்கம், சூடு, சொரணை இல்லாத அமைச்சர்கள் இதை வரவேற்கிறார்கள்.  அ தி மு க வினர் இப்போ கொஞ்சம் நாளாத்தான் நிமிர்ந்து நிற்கிறார்கள். இனி மத்திய அரசு அதை அனுமதிக்காது.  பி ஜே பி மற்றும் மத்திய அரசின் தலையீடு இனி அதிகரிக்கும். அ தி மு க என்கிற அடிமை கட்சியிடம் வேறு எதுவும் எதிர்பார்க்கமுடியாது. எல்லோரும் இது பினாமி ஆட்சி என்று நினைத்தோம். அது முற்றிலும் தவறு. பினாமி ஆட்சி இல்லை இது நேரடி ஆட்சிதான். குடும்பத்தில் தலைவர் சரியில்லை என்றால் யார் வேண்டுமென்றாலும் புகுந்து நாட்டாமை செய்வார்கள். அதுதான் இங்கே நடக்கிறது. ரஜினி படத்தில் வரும் காமெடி போல் மாப்பிள்ளை (முதல்வர்) இவர்தான் இவரு போட்டிருக்கிற சட்டை (அதிகாரம்) என்னுடையது என்பது போல் இருக்கிறது. இவர்கள் கட்டம…
Recent posts

கருப்பு பணம், கருப்பு மனம், கருப்பு தினம்.

கருப்பு பணம், கருப்பு மனம், கருப்பு தினம். காலா தன் , காலா மன் , காலா தின்.

கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறோம். அதற்குத்தான் இந்த பண மதிப்பிழக்க நடவடிக்கை என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிறது. இது வரை எவ்வளவு கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை. நாம் எல்லோருக்கும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுக்க எவ்வளவு நேரம் வரிசையில் நின்றோம்? சேகர் ரெட்டிக்கு கட்டு காட்டாய் இரண்டாயிரம் ரூபாய் சென்றது எப்படி என்று சி பி ஐ யால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆர் பி ஐ க்கும் தெரியவில்லை. சில நூறு உயிர்கள் போனது தான்  மிச்சம். சாதாரண மக்கள் கஷ்டப்பட்டது தான்  மிச்சம்.

கருப்பு பணமும் ஒழியவில்லை. கருப்பு பண முதலைகளும் ஒழியவில்லை.

நம்மை ஏமாற்றிய கருப்பு மனம் படைத்தோருக்கு எதிரான கருப்பு தினம் இன்று.


தங்கள் தலைவியையே காப்பாற்ற இயலாதவர்கள் தமிழகத்தை காப்பார்களா ?

தங்கள் தலைவியையே காப்பாற்ற இயலாதவர்கள் தமிழகத்தை காப்பார்களா ? சென்னை மக்கள் இந்த வருடம் கொஞ்சம் கவலையோடுதான் இருக்கிறார்கள்.

2015 ல் வெள்ளம் .
2016 ல் புயல் 
2017 ல் என்னவாகுமோ?

வெதர் மேன் ரிப்போர்ட் என்ன சொல்லுது?
பிபிசி ல என்ன சொல்லுறாங்க ?
நாசா போர்க்காஸ்ட்  என்ன?

நல்லபடியா நவம்பர் டிசம்பர்  மாதங்கள் இருக்குமா?
இப்படி நிறைய கேள்விகள்.

கடந்த 6 மாதமாக
ஊரெல்லாம் தோண்டி போட்டு இருக்கிறார்கள். வடிகால் வாய்க்கால் திட்டத்திற்கு. எதுவும் முழுமையாக முடிந்த மாதிரி தெரியவில்லை. பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது . 2 சக்கர வண்டி ஓட்டுபவர்கள், 4 சக்கர வண்டி ஓட்டுபவர்கள்  முதுகு வலியோடும், கழுத்து வலியோடும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
நெடுவாசல் கதிரமங்கலத்தில் மக்கள் போராடினார்கள். விவசாயிகள் டெல்லிக்கு போய்  போராடினார்கள். சமூகப்போராளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பிஜேபியினர் தமிழக ஆளும்கட்சி போலறிக்கை விட்டு கொண்டு இருந்தனர்.
இரண்டு மூணாச்சு. மூணு ரெண்டாச்சு.
 அதிமுகவில் எல்லா அணிகளிலும் எல்லோரும் பேசினர். தமிழ் பட கிளைமாக்ஸ் காட்சி  போல் கவர்னர் இ பி எஸ் , ஓ பி எஸ் கைகளை பிடித்து சேர்த்து வைத்…

வலைப்பதிவு கரையோரம் -நானும் பதிவர்தான்.. நானும் பதிவர்தான்.. நானும் பதிவர்தான்..

வலைப்பதிவு கரையோரம் அடிக்கடி காற்று வாங்கி காலாற நடை பயின்றுகொண்டிருந்தவன் கடந்த 2006 ம் ஆண்டு இந்த வலைப்பதிவை தொடங்கினேன்।தொடங்கிய கையோடு இதை ஏறக்கட்டி விட்டு சென்று விட்டேன்। அவ்வப்போது காற்று வாங்க வருவதோடு சரி। பதிவலைகளில் கால் நனைப்பது (பின்னூட்டமிடுவது) கூட கிடையாது।
எழுதுவதற்க்கு ஆசை உண்டு ஆனால் (ஆசை உண்டு தாசில் பண்ண அம்சம் உண்டு கழுதை மேய்க்க என்பது போல்) என்ன எழுதுவது என்று தெரியாது।

பதிவராக வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

சரி எப்படியாவது ஓரு பிரபல வலைப்பதிவர் ஆகிவிடவேண்டும் என்று முடிவு செய்து அது குறித்து ஆறிவுரை பெற என் நண்பன் அதிரடி ஆலோசகர் அழகர்சாமியை பார்க்கலாம் என்று அவனுக்கு செல்பேசினேன்।

மாலை ஒரு 7 மணிக்கு டாஸ்மாக் கடையருகில் உள்ள பாரில் சந்தித்தோம்।

"அழகரு ஒன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்டா"

" என்னா॥ ஏதாவது லவ் மேட்டரா?"

" மடையா, கல்யாணமானவன் கிட்ட கேக்குற கேள்வியா இது"

"அதில்லடா... நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன் தான்ற விதத்துல கேட்டேன்"

"இல்ல இல்ல ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் தான் நீ நிதானமா பேசுவ। ம…

தில்லையும் தமிழும்

வலையுலக அன்பர்களே,

இப்போது காரச்சாரமாக விவாதிக்கப்படும் சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சில கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன்.

கோவிலில் எந்த இடத்திலும் தமிழில் பாட எல்லோருக்கும் உரிமை உண்டு.
அதை தடுப்பது அடாவடித்தனம். இந்த இடத்தில் தமிழில் பாடலாம் இங்கு தமிழில் பாடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு.

சில அறிவுக்கொழுந்துகள் "கர்பகிரகத்துக்குள் எல்லோரும் போக முடியுமா? அது சிலருக்கு மட்டும் பாத்தியதைப்பட்ட எல்லை" என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஐயா, கர்பகிரகத்திலும் யாரும் செல்லலாம். ஆனால் ஒவ்வொருவரும் உள்ளே செல்ல முற்ப்பட்டால் அனைவரும் கடவுளை வணங்க இடையூறு ஏற்ப்படும் என்றுதான் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மட்டும் அனுமதிக்கும் கட்டுப்பாடு (discipline) ஏற்ப்பட்டது. யாரையும் விலக்கி வைக்க ஏற்ப்பட்ட கட்டுப்பாடு அல்ல. பின்பு அதை விதியாக்கிவிட்டார்கள்.

பிறபக்தர்களின் சாமி தரிசனத்திற்க்கு தொல்லையின்றி இருந்தால் சிற்றம்பலத்தில் என்ன பொன்னம்பலத்தில் என்ன் கர்பகிரகத்திலும் (சிற்ற்ம்பலமும் கர்பகிரகமும் ஒன்றே என்றாலும்) பாடலாம். தமிழில் கண்டிப்பாக பாடலாம். இதை தீட்சிதர்களும் உணரவே…

மும்பை பயங்கரம்

மும்பை குண்டுவெடிப்புச் செய்தி மனதை கலக்கமடையச்செய்கிறது.

எதற்க்காக? ஏன்?

யாருக்கு லாபம்?

இறந்தவர்களுக்கு என் அஞ்சலி.

அகர முதல் எழுத்து

ஆழிப்பெருங்கடலாய் அலை மோதும் எண்ணப்பெருக்கை, சுழன்று அடிக்கும் கனவுகளை, கற்பனைகளை கைகளால் அள்ளிப் பருகும் அருமுயற்சி.

அதாகப்பட்டது

உரையாடலும் சம்பாஷணைகளும் குறைந்துவிட்ட இக்காலகட்டத்தில் மனதில் அரும்பும் விஷயங்களை பகிற்ந்துகொள்ள வலைப்பதிவுகள் ஒரு சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது.

தமிழில் எழுதவேண்டுமென்ற என் ஆவலாலும் ஆர்வத்தாலும் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

அன்புடன் கரை காண ஆதரிப்பீர்