Tuesday, March 20, 2018

லெனின், பெரியார் எதிர்ப்பு

லெனின், பெரியார் எதிர்ப்பு 



காவி கட்சிகளும், காவி அமைப்புகளும் ஏன் லெனினையும் பெரியாரையும் இவ்வளவு வன்மத்துடனும் குரோதத்துடனும் எதிர்க்கின்றன? 
ஆர் எஸ் எஸ், ஜனசங்கம் முதல் பி ஜே பி, வி எச் பி, ஹிந்து முன்னணி  வரை சங்க பரிவாரங்களுக்கும் காவி பக்தர்களுக்கும் லெனின் மற்றும் பெரியார் பெயரை கேட்டாலே அஸ்தியில் சுரம் காண்பது ஏன்? 
அதிர்வது ஏன்?
அஸ்திவாரம் ஆட்டம் காண்பது ஏன்?

லெனின் உழைக்கும் மக்களை உயர்த்திப்பிடித்தார். பாட்டாளிகளின் உரிமை பேசினார். தொழிலாளிகளின் உயர்வை நாடினார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சாடினார். உழைப்புச்சுரண்டலை எதிர்த்தார்.

பெரியார் சமூக ஏற்றத்தாழ்வுகளை சாடியவர். சமூக ஒடுக்குமுறையை எதிர்த்தவர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை உயர்த்திப்பிடித்தவர். சமூக பொருளாதார சுரண்டலை, சமூக பிளவுகளை  எதிர்த்தவர். சமூக நீதியையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியவர்.

ஆனால் காவி பக்தர்கள் விதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், ஆன்மிகத்தின் பெயராலும், வேதங்களின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயராலும், புராண இதிகாசங்களின் பெயராலும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்த நினைப்பவர்கள். பிறப்பு சார்ந்த சமூக பேதத்தை  பேண நினைப்பவர்கள். அதை கடைபிடிக்க நினைப்பவர்கள். அதன் மூலம் சாதி கட்டமைப்பை சாதி பேதங்களை நிலை நிறுத்த முயல்பவர்கள். மத நல்லிணக்கத்தை எதிர்ப்பவர்கள். சமூக பொருளாதார சுரண்டல்களை ஊக்குவிப்பவர்கள். சாதிய படி நிலைகளை மீட்டு சுயநலம் பேண  நினைப்பவர்கள். இப்பண்புகள் இந்துத்துவ  காவி பக்தர் களின் ரத்தத்தில் ஊறியவை.

லெனின் வர்க்க பேதத்தை எதிர்த்தவர்.
பெரியார் வர்ண பேதத்தை எதிர்த்தவர்.

எனவே இயல்பாகவே காவி கட்சியினருக்கு இவர்கள் மேல் வன்மமும் குரோதமும் எரிச்சலும் உண்டு.

கொள்கைரீதியிலும், தத்துவார்த்த அடிப்படையிலும் காவி கும்பல்களால் லெனினையும், பெரியாரையும் சகிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் வெளிப்படையாக எதிர்க்க திராணியற்றவர்கள் இப்பொழுது இந்த மத்திய மாநில ஆட்சியில் அதற்கான சமயம் வாய்த்ததாக கருதுகிறார்கள்.

எனவே அகங்காரத்தின் வெளிப்பாடாக லெனின் சிலையையும் பெரியார் சிலையையும் தகர்கின்றனர். பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். அரசியல் ஆதாயம் தேட விழைகின்றனர்.

லெனினும் பெரியாரும் தமிழக மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியவர்கள். அவர்களை யாராலும் அப்புறப்படுத்த முடியாது. பகுத்தறிவு மண்ணான  தமிழகத்தில் மதவாத புற்று நோய்  பரவாது. காவிகளின் திட்டமும் கொட்டமும்  கனவும் கானல் நீராவது உறுதி.

No comments:

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...