வலையுலக அன்பர்களே,
இப்போது காரச்சாரமாக விவாதிக்கப்படும் சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சில கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன்.
கோவிலில் எந்த இடத்திலும் தமிழில் பாட எல்லோருக்கும் உரிமை உண்டு.
அதை தடுப்பது அடாவடித்தனம். இந்த இடத்தில் தமிழில் பாடலாம் இங்கு தமிழில் பாடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு.
சில அறிவுக்கொழுந்துகள் "கர்பகிரகத்துக்குள் எல்லோரும் போக முடியுமா? அது சிலருக்கு மட்டும் பாத்தியதைப்பட்ட எல்லை" என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஐயா, கர்பகிரகத்திலும் யாரும் செல்லலாம். ஆனால் ஒவ்வொருவரும் உள்ளே செல்ல முற்ப்பட்டால் அனைவரும் கடவுளை வணங்க இடையூறு ஏற்ப்படும் என்றுதான் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மட்டும் அனுமதிக்கும் கட்டுப்பாடு (discipline) ஏற்ப்பட்டது. யாரையும் விலக்கி வைக்க ஏற்ப்பட்ட கட்டுப்பாடு அல்ல. பின்பு அதை விதியாக்கிவிட்டார்கள்.
பிறபக்தர்களின் சாமி தரிசனத்திற்க்கு தொல்லையின்றி இருந்தால் சிற்றம்பலத்தில் என்ன பொன்னம்பலத்தில் என்ன் கர்பகிரகத்திலும் (சிற்ற்ம்பலமும் கர்பகிரகமும் ஒன்றே என்றாலும்) பாடலாம். தமிழில் கண்டிப்பாக பாடலாம். இதை தீட்சிதர்களும் உணரவேண்டும். ஏனையோரும் உணரவேண்டும்.
திருச்சிற்றம்பலம்
Subscribe to:
Post Comments (Atom)
மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்
மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும் மும்மொழி திட்டம் என்றால் என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...
-
வலையுலக அன்பர்களே, இப்போது காரச்சாரமாக விவாதிக்கப்படும் சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சில கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன். கோவிலில் எந்த ...
-
ஆழிப்பெருங்கடலாய் அலை மோதும் எண்ணப்பெருக்கை, சுழன்று அடிக்கும் கனவுகளை, கற்பனைகளை கைகளால் அள்ளிப் பருகும் அருமுயற்சி. அதாகப்பட்டது உரையாடலும...
-
வலைப்பதிவு கரையோரம் அடிக்கடி காற்று வாங்கி காலாற நடை பயின்றுகொண்டிருந்தவன் கடந்த 2006 ம் ஆண்டு இந்த வலைப்பதிவை தொடங்கினேன் । தொடங்கிய கை...
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment