கருப்பு பணம், கருப்பு மனம், கருப்பு தினம்.
காலா தன் , காலா மன் , காலா தின்.கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறோம். அதற்குத்தான் இந்த பண மதிப்பிழக்க நடவடிக்கை என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிறது. இது வரை எவ்வளவு கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை. நாம் எல்லோருக்கும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுக்க எவ்வளவு நேரம் வரிசையில் நின்றோம்? சேகர் ரெட்டிக்கு கட்டு காட்டாய் இரண்டாயிரம் ரூபாய் சென்றது எப்படி என்று சி பி ஐ யால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆர் பி ஐ க்கும் தெரியவில்லை. சில நூறு உயிர்கள் போனது தான் மிச்சம். சாதாரண மக்கள் கஷ்டப்பட்டது தான் மிச்சம்.
கருப்பு பணமும் ஒழியவில்லை. கருப்பு பண முதலைகளும் ஒழியவில்லை.
நம்மை ஏமாற்றிய கருப்பு மனம் படைத்தோருக்கு எதிரான கருப்பு தினம் இன்று.
No comments:
Post a Comment