Monday, September 17, 2018

மனிதனை நினை

மனிதனை நினை 


பெரியார் பிறந்தநாள்

தேசாபிமானமும் தேவையில்லை பாசாபிமானமும் தேவையில்லை 
மனிதாபிமானம்தான் இன்றைய தேவை.

Wednesday, July 25, 2018

தமிழ் - திராவிடம்

தமிழ்  - திராவிடம் 


தமிழும் திராவிடமும் ஒன்றா அல்லது வேறுவேறா?

தமிழ் இனத்திற்கு  ஒரு நீண்ட நெடிய வரலாறும் தொன்மையும் உள்ளது என்பது பல்வேறு தருணங்களில் ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்ட செய்தி.
ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. இன்னும் உயிர்ப்புடன் இருப்பதும் ப கோடி மக்களால் பேசப்படுவதும் செம்மொழியான தமிழ் மொழியே.


கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றுள் முத்திரை பாதித்தது தமிழ். ஆகச்சிறந்ததொரு நாகரீகத்தையும் பண்பாடடையும் வார்த்தெடுத்த இனம்  தமிழ் இனம்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் வியாபித்திருந்த தமிழ் இனம், ஆரிய வருகையால் தென் இந்தியாவிற்குள் குறுக்கப்பட்டது. இந்தியா துணை கண்டத்தின் பூர்வகுடியான இனம்தான் தமிழ் இனம். வட இந்தியாவில்  ஆரிய யூரேசியா மற்றும் மங்கோலிய இனங்களின் தாக்கத்தால் முற்றிலும் மாறுபட்ட ஆரிய ஆதிக்கமிகுந்த இனமாக வட இந்திய சமூகம் மாறியது.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல் இல்லை. திராவிடம் என்பது தமிழ் சொல் இல்லை. அது ஆரியர்களால் அளிக்கப்பட்ட சொல். இந்தியா கண்டத்தின் , பாரத கண்டத்தின் பூர்வ குடிகளை குறிக்க ஆரியர் பயன்படுத்திய வார்த்தை. எனவே அவர்களது வருகைக்கு முன் அந்த சொல்லில்லை. இந்தியா என்ற சொல்லோ,இந்து என்ற சொல்லோ, பாரதம் என்ற சொல்லோ இல்லை.

ஆரியர் தாக்கமில்லாத தமிழ் வழங்கியும் புழங்கியும் வந்த மொத்த நிலப்பகுதியும் தமிழகம்தான். அதன் மக்களாகிய தமிழர்களை திராவிடர் என்று அழைத்தனர்.

திராவிடரின்  ஆதி மொழி தமிழ்.
எனவே திராவிடர் தமிழரே  தமிழர் திராவிடரே.

அப்போது திராவிட இனம்  என்பதும் தமிழ் இனமே.

தமிழில் இருந்து உருவான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற ஏனைய மொழிகள் திராவிட மொழி குடும்பமாக பார்க்கப்படுகிறது.
எல்லோருக்கும் தமிழ்த்தான் வேர். தமிழ் இனம் தான் முதன்மையான இனம்.
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தமிழ் இனத்தின் கிளைகள்தான்.

இதை மறைத்து திராவிடத்தை இகழ்ந்து தமிழ் தேசியம் பேசும் இன  வெறியர்கள் ஆபத்தானவர்கள். குறுக்கியமானப்பன்மை கொண்ட சந்தர்ப்பவாதிகள். சுயநலமிகள். அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.




Wednesday, April 18, 2018

எச். ராஜா வின் கள்ளப் பதிவு

எச். ராஜா வின் கள்ளப் பதிவு



பெரியாழ்வார் தோட்டத்தில் துளசி செடியின் கீழ்  கண்டெடுத்த குழந்தைக்கு (legitimate  child? ) தெய்வ நிலை (M.P. -Married to Perumal) தந்த ஆன்மிக சிறப்பை பற்றி யாராவது கேள்வி கேட்டு இருக்கிறார்களா? . ஆண்டாள் பற்றியும்  எச் . ராஜாவின் பார்வை இதுதான் போல.

இயற்கையாகவே அனைத்து குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான் (legitimate children) என்பது மனிதத்துவம்.

ஆன்மிகத்தில் வேறு பார்வை இருக்கிறதோ?


வெல்க ஆன்மிக அரசியல்.

ராமாயண மஹாபாரதக் கதைகளில் உள்ள பிறப்புகள், சிறப்புகள்  பற்றி பதிவுகள்  செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.

Thursday, April 05, 2018

ஸ்கீம் என்றால் என்ன?

ஸ்கீம் என்றால் என்ன?

WHAT IS MEANT BY SCHEME?

Supreme Court's meaning

a large-scale systematic plan or arrangement for attaining some particular object or putting a particular idea into effect.

synonyms:planproject, plan of action, programmestrategystratagemgame plan
Bjp's meaning

make plans, especially in a devious way or with intent to do something illegal or wrong.

synonyms:plot, hatch a plot, conspire, take part in a conspiracy, intrigueconnivemanoeuvre

Tuesday, March 20, 2018

காவி நிறத்தின் எதிர் நிறம்

காவி நிறத்தின் எதிர் நிறம் 

மதம், கடவுள், ஆன்மிகம், மதவாதம், மதவெறி, நம்பிக்கைகள், கண்முடித்தனமான ( மூட ) நம்பிக்கைகள் ஆகியவற்றின் குறியீடான காவி நிறத்தின் எதிர் நிறம் எதுவென்றால், பகுத்தறிவையும், சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பிரதிபலிக்கும் கருப்பு நிறமும், உழைப்பையும் தியாகத்தையும் பொருளாதார சமத்துவத்தையும் குறிக்கும் சிவப்பு நிறமுமேயாகும்.

காவி நிறத்தின் எதிர் நிறம் கருப்பு சிவப்பு.

லெனின், பெரியார் எதிர்ப்பு

லெனின், பெரியார் எதிர்ப்பு 



காவி கட்சிகளும், காவி அமைப்புகளும் ஏன் லெனினையும் பெரியாரையும் இவ்வளவு வன்மத்துடனும் குரோதத்துடனும் எதிர்க்கின்றன? 
ஆர் எஸ் எஸ், ஜனசங்கம் முதல் பி ஜே பி, வி எச் பி, ஹிந்து முன்னணி  வரை சங்க பரிவாரங்களுக்கும் காவி பக்தர்களுக்கும் லெனின் மற்றும் பெரியார் பெயரை கேட்டாலே அஸ்தியில் சுரம் காண்பது ஏன்? 
அதிர்வது ஏன்?
அஸ்திவாரம் ஆட்டம் காண்பது ஏன்?

லெனின் உழைக்கும் மக்களை உயர்த்திப்பிடித்தார். பாட்டாளிகளின் உரிமை பேசினார். தொழிலாளிகளின் உயர்வை நாடினார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சாடினார். உழைப்புச்சுரண்டலை எதிர்த்தார்.

பெரியார் சமூக ஏற்றத்தாழ்வுகளை சாடியவர். சமூக ஒடுக்குமுறையை எதிர்த்தவர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை உயர்த்திப்பிடித்தவர். சமூக பொருளாதார சுரண்டலை, சமூக பிளவுகளை  எதிர்த்தவர். சமூக நீதியையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியவர்.

ஆனால் காவி பக்தர்கள் விதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், ஆன்மிகத்தின் பெயராலும், வேதங்களின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயராலும், புராண இதிகாசங்களின் பெயராலும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்த நினைப்பவர்கள். பிறப்பு சார்ந்த சமூக பேதத்தை  பேண நினைப்பவர்கள். அதை கடைபிடிக்க நினைப்பவர்கள். அதன் மூலம் சாதி கட்டமைப்பை சாதி பேதங்களை நிலை நிறுத்த முயல்பவர்கள். மத நல்லிணக்கத்தை எதிர்ப்பவர்கள். சமூக பொருளாதார சுரண்டல்களை ஊக்குவிப்பவர்கள். சாதிய படி நிலைகளை மீட்டு சுயநலம் பேண  நினைப்பவர்கள். இப்பண்புகள் இந்துத்துவ  காவி பக்தர் களின் ரத்தத்தில் ஊறியவை.

லெனின் வர்க்க பேதத்தை எதிர்த்தவர்.
பெரியார் வர்ண பேதத்தை எதிர்த்தவர்.

எனவே இயல்பாகவே காவி கட்சியினருக்கு இவர்கள் மேல் வன்மமும் குரோதமும் எரிச்சலும் உண்டு.

கொள்கைரீதியிலும், தத்துவார்த்த அடிப்படையிலும் காவி கும்பல்களால் லெனினையும், பெரியாரையும் சகிக்க முடியவில்லை. இவ்வளவு நாள் வெளிப்படையாக எதிர்க்க திராணியற்றவர்கள் இப்பொழுது இந்த மத்திய மாநில ஆட்சியில் அதற்கான சமயம் வாய்த்ததாக கருதுகிறார்கள்.

எனவே அகங்காரத்தின் வெளிப்பாடாக லெனின் சிலையையும் பெரியார் சிலையையும் தகர்கின்றனர். பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். அரசியல் ஆதாயம் தேட விழைகின்றனர்.

லெனினும் பெரியாரும் தமிழக மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியவர்கள். அவர்களை யாராலும் அப்புறப்படுத்த முடியாது. பகுத்தறிவு மண்ணான  தமிழகத்தில் மதவாத புற்று நோய்  பரவாது. காவிகளின் திட்டமும் கொட்டமும்  கனவும் கானல் நீராவது உறுதி.

Thursday, March 08, 2018

சிலை தகர்ப்பு அரசியல்

சிலை தகர்ப்பு அரசியல்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேஷில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டது.
கொல்கொத்தாவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டது.





இதை மோடியும் அமித் ஷாவும் கண்டித்துள்ளார்கள்.

மத்திய உள் துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசு களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஷ்யாமா  பிரசாத் முகர்ஜி சிலையும் சிதைக்கப்பட்டதை இவர்களால்  தாங்க முடியவில்லை. அதுதான் இந்த கண்டனங்களுக்கு காரணம்.


என்னா வில்லத்தனம்

என்னா வில்லத்தனம்

திரிபுராவில் வெற்றி பெற்ற பி ஜே பி  யின் முதல்வர் வேட்பாளர் பிப்லப் தேப் மாணிக் சர்காரிடம்  ஆசி பெற்றார். 
ஆஹா  பிரமாதம்! என்று நினைத்தால், 
அடுத்து பின்னால் லெனின் சிலை உடைக்கப்படுகிறது. 
சினிமாவில் கூட இத்தகைய வில்லத்தனத்தை பார்க்க முடியாது.


இது மட்டுமல்ல, பல கம்யூனிஸ்ட் அலுவலகங்களும் வீடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன.

வன்மத்தின் உச்சம்.

இதுதான்  பி ஜே பி யின்  உண்மை முகம்.

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...